Header Ads Widget

Doctor Vikatan: தினசரி கீரை சாப்பிட அறிவுறுத்தும் மருத்துவர்... சாத்தியமில்லாத நிலையில் மாற்று என்ன?

Doctor Vikatan: நான் அடிக்கடி டிராவல் செய்யும் வேலையில் இருக்கிறேன். மருத்துவர்கள் அறிவுறுத்தும்படி அடிக்கடி என்னால் கீரை சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. இதற்கு என்ன மாற்று உள்ளது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்

உங்களுக்கு மட்டுமல்ல, ஹாஸ்டலில் தங்கிப் படிப்போர், ஆற அமர சமைத்துச் சாப்பிட நேரமில்லாதோர் ஆகியோருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. வாரத்தில் மூன்று நாள்களுக்காவது கீரை சேர்த்துக் கொள்வது நல்லது என்றாலும் அது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை என்பதுதான் நிஜம்.

இதற்கு சில மாற்றுகளைச் சொல்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதினா-கொத்தமல்லி சட்னியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்

அடுத்தது கறிவேப்பிலை பொடி. இது கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும். வீட்டிலும் எளிதாகத் தயாரித்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். இந்தப் பொடியை சூடான சாதத்தில் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். நீர்மோர், தயிர் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம்.

முருங்கைக் கீரை

அதேபோல முருங்கை இலைப் பொடி கடைகளில் கிடைக்கிறது. அதையும் ஜூஸில் கலந்து குடிக்கலாம். இவை தவிர, பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் சூப்பர் க்ரீன் பொடி என்று கிடைக்கும். அதையும் ஜூஸ், ஸ்மூத்தி, மோர் போன்றவற்றில் கலந்து குடிக்கலாம். இந்தப் பொடிகளை எல்லாம் சின்னச் சின்ன ஸிப்லாக் கவர்களில் நிரப்பி எடுத்துச் சென்றால் பயணங்களின்போதும் ஆரோக்கியமாகச் சாப்பிட முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்