Header Ads Widget

பிரக்ஞானந்தா-வுக்கு உற்சக வரவேற்பு முதல் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் வரை | News in Photos

ரக்‌ஷா பந்தன் விழாவை முன்னிட்டு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு ஜெயின் கல்லூரி மாணவிகள் ராக்கி கயிறு கட்டி இனிப்பு வழங்கினர்.
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் குடமுழுக்கு ஆண்டு விழாவை முன்னிட்டு, 108 கலச அபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்காக 108 கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
செஸ் உலகக் கோப்பையில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்துவிட்டு தமிழகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆய்வுக்கு வந்த போது கடை வீதியில் வளையல்கள் வாங்கிய கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள்.
ஈரோடு, சேலத்தில் இருந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடி வழியாக திருப்பூருக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் சிக்கினார்கள். 6.50 கிலோ கஞ்சாவும் சிக்கியது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மகளிர் கல்லூரியில் கட்டப்பட்ட புதிய 4 கட்டடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
புதுச்சேரி: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 64 கிலோ பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற புதுச்சேரி மாணவி ஹர்ஷிகாவை சபாநாயகர் செல்வம் பாராட்டினார்.
திருநெல்வேலி: ஆவணி அவிட்டத்தில் விரதமிருந்து பலர் பூணுல் அணிந்து கொள்ளும் நிகழ்வு
கொடைக்கானலில் நடைபெறும் அன்னை தெரசா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநர் ரவி கொடைக்கானல் செல்கிறார் என்பதால் சாலையில் உள்ள வேகத்தடைகளை அகற்றும் பணி நடக்கிறது.
திருநெல்வேலி: ரக்‌ஷா பந்தன் தினத்தையொட்டி பிரம்மகுமாரிகள் சார்பில் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி இனிப்புகளை வழங்கினர்.
திருநெல்வேலி: கள்ளகுறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியனின் தற்காலிக பணியிட நீக்கத்தை ரத்து செய்ய கோரி நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சார்பில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
உலகக்கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா பத்திரிகையாளர் சந்திப்பு.
ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர். இடம்: மைலாப்பூர் சென்னை.
திருச்சி மாவட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டம் வழங்காமல் இருப்பதை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் பட்டம் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் - நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களை சந்தித்த இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொது செயலாளருமான கௌதமன்.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கோதைகிராமம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஸ்ரீ ருத்ர ஹோமம் வழிபாடு மற்றும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
சந்திராயன்-3 திட்ட இயக்குனர் விழுப்புரம் வீரமுத்துவேல் தந்தை பழனிவேலுவை நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயண ராவ் விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விருதுநகரில் காவலர் நல உணவகத்தினை எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் திறந்து வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகர பகுதிகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்த பிரச்னையை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியரின் பணியிடை நீக்கத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கலித்தீர்தான் குப்பம் கிராமமக்கள் இலவச மனைப்பட்டா வேண்டி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
தேசிய இளைஞர் தினம் மற்றும் எச்ஐவி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் பொசுக்குடி கிராமத்தில் மழை வேண்டி, வீடுகள் தோறும் சென்று, கடந்த ஆண்டு விளைந்த தானியங்களை சேகரித்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பனை ஓலையில் பரிமாறப்பட்டது.
வேலூரில் பெண்மணி ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். அதையடுத்து அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இந்த நிலையில், அவரின் உடலுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாத உதவித்தொகையை 1000 மாக உயர்த்திய முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மாணவர்கள் நன்றி கூறினர்.
புதுச்சேரி மத்திய பல்கலைகழகம் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
கருமேகங்கள் சூழ்ந்துகாணப்படும் காட்சி. சென்னை ஸ்பென்சர் சிக்னல்
ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் குடும்பத்துடன் ராக்கி கயிறு கட்டி கொண்டாடினர்.


from India News https://ift.tt/Bf3vpuU
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்