நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று பதிலளிக்கிறார் பிரதமர் மோடி!
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக உரையாற்றினார். மணிப்பூரில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டதாக குற்றம் சட்டினார். தொடர்ந்து அமித் ஷா பதிலளித்து பேசினார்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாலேயே மணிப்பூர் முதலமைச்சரை மாற்ற வேண்டிய தேவை ஏற்படவில்லை. மணிப்பூரில் நடைபெற்றது மிகவும் எதிர்பாராத சம்பவம், சமூகத்துக்கு வெட்கக்கேடானது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து பேசுகிறார். அதன் பின்னர், தேவை பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம்!
from India News https://ift.tt/gPTMY9Z
via IFTTT

0 கருத்துகள்