மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 பெறுவதற்கு தமிழகம் முழுவதும் இருந்து 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலித்தது. அதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டது. 56.50 லட்சம் விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட்டன.
தற்போது தமிழகத்தில் 1.06 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் 1000 ரூபாயை தமிழக அரசு செலுத்தி வருகிறது. வழக்கமாக ஆன்லைனில் கைவரிசையை காட்டும் மோசடிக் கும்பல் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள் மோசடி வேலையை ஆரம்பித்துள்ளன.
தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பெண்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் செய்தியை தொடர்ந்து ஓடிபி எண் கேட்டு மோசடி போன் கால்கள் வந்துள்ளது.
அரசுத் தரப்பில் இருந்து இத்திட்டத்திற்காக ஓடிபி எண் எதுவும் கேட்கப்படுவதில்லை. எனவே இதுபோன்ற போன் அழைப்புகள் மூலம் யாரும் ஓடிபி எண், பிற விவரங்களை கேட்டால் கொடுக்காதீர்கள்.
போலி தொலைபேசி அழைப்புகள், எஸ்.எம்.எஸ் மற்றும் தவறான வாட்ஸாப் செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். வாட்ஸாப், எஸ்.எம்.எஸ்-ல் வரும் லிங்க் எதையும் கிளிக் செய்ய வேண்டாம். ``சந்தேகம் ஏதும் இருந்தால் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகுங்கள்" என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
from Latest news

0 கருத்துகள்