உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் வசித்து வருபவர் அல்கா பதக். இவர் சிறுதொழில் மற்றும் டியூஷன் வகுப்புகள் நடத்தி வருமானம் ஈட்டி வருகிறார்.
தன் மகளின் திருமணத்துக்காக 2022 அக்டோபரில் இருந்து பணத்தை பேங்க் லாக்கரில் சேமித்து வருகிறார். சுமார் 18 லட்சம் ரூபாய் பணத்தையும், சில நகைகளையும் தனது லாக்கரில் வைத்திருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/dcac3a6b-76fb-492d-b4e3-cc20f179280a/kamadenu_2023_09_8cd1d630_b6f9_4903_9280_41af4a61273f_money_1.avif)
லாக்கரின் வருடாந்தர பராமரிப்பு மற்றும் கேஒய்சி வெரிஃபிகேஷன் சரிபார்ப்பதற்காக அல்கா பதக்கை வங்கி அழைத்திருக்கிறது. ஆர்வமாகச் சென்று பார்த்தபோது அவருக்கான அதிர்ச்சி காத்திருந்தது.
அவரது பணத்தை கறையான்கள் அரித்து இருந்தன. மிகவும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக வங்கி கிளை மேனேஜரை தொடர்புகொண்டு இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகாரளித்து இருக்கிறார்.
அதைத் தொடர்ந்து வங்கியின் மேனேஜர், ரூபாய் நோட்டுகளில் எந்த அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிட விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/758b7115-e552-462f-b227-4a5e1d770c51/termites_3367350_1280.jpg)
இது குறித்து பேசிய அல்கா பதக், ``வங்கி லக்கரில் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை வைப்பதற்கு குறிப்பிட்ட நிபந்தனைகள் இருப்பது பற்றி எனக்குத் தெரியாது. வங்கி லாக்கரில் பணத்தை வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தேன்... ஆனால் என்னுடைய பணம் இப்படி போய் விட்டதே" என்று மனம் வருந்தி புலம்புகிறார்.
from Latest news
0 கருத்துகள்