Header Ads Widget

அதிகாலையில் அரெஸ்ட் வாரன்ட்... 3 மணிநேரம் காத்திருந்த சி.ஐ.டி! - சந்திரபாபு நாயுடு திடீர் கைது

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (செப்டம்பர் 9) காலை கைது செய்தது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்ற தாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதிகாலையில் அவரை கைது செய்ய சென்றனர் அதிகாரிகள். அப்போது தொண்டர்கள் பெருமளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை 3 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்ய கைது வாரண்டை அவருக்கு அளித்தாலும், சந்திரபாபு நாயிடு எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருப்பதால் அவரை 6 மணி வரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என எஸ்.பி.ஜி அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து 6 மணி வரை காத்திருந்து கைது செய்திருக்கிறார்கள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள். ஆந்திர அரசியலில் அவரின் கைது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்