முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புகார் மனு.புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குழு, கோவா மாநில கவர்னர் மற்றும் முதல்வரை சந்தித்தனர்.காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த்!விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வச்ச காரப்பட்டி, ஆர்.ஆர்.நகர், மருளுத்து பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் க.பொன்முடி, மனோ தங்கராஜ் பங்கேற்கும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.புதுச்சேரி "எனது பில் எனது உரிமை" என்னும் மத்திய அரசின் பரிசு திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.விருதுநகர் அருகே பாலவனத்தம் கிராமத்தில் பூ பூத்த பனை மரம்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜனநாயகமான தேர்தல் கூட்டமைப்பு சார்பில் ஒய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி அளித்தார்.சென்னை கொசப்பேட்டையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விற்பனைக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்!ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் கோபிசெட்டிபாளையம் நாகதேம்பாளையம் கிராமம் வெள்ளியங்காட்டு புதூர் மற்றும் அய்யம்புதூர் பகுதிகளில் பல ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து சேதமாயின.சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பு படிக்க, வரும் புதிய மாணவர்களுக்கு, பழைய மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்றனர்.மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை கலங்கரை விளக்கம் முதல் மைலாப்பூர் வரை சுரங்கப்பாதை தோண்டும் பணி.ஸ்ரீ ராகவேந்த்திரரின் 352-வது ஆராதனை விழாவை முன்னிட்டு நாகர்கோவில் வடிவீஸ்வரத்தி்ல் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் ஆலயத்தி்ல் சுவாமியை வழிபடும் மக்கள்.விழுப்புரம் ஆவின் நிறுவன அலுவலகத்தில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டனர்.திருச்செந்தூரில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கடல் அன்னையை வணங்கி சுவாமி தரிசனம் செய்தார்கள்.கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற மத்திய அரசின் 'சாகர் பரிக்ரமா' கடலோர யாத்திரை நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம் அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்று மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.கேரளாவில் ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் ஆய்வுக்கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன,மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் மனைவி சைந்தவி உடன் சாமி தரிசனம் சிறப்பு வழிபாடு.ஈரோட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தென்காசி நெற்கட்டான்செவலில் மாமன்னர் பூலித்தேவனின் 308வது பிறந்தநாளை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாமன்னர் பூலித்தேவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0 கருத்துகள்