நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடியிருந்த ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
அதேபோல் தற்போது உத்தரப் பிரதேச டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ரிங்கு. உத்தரப்பிரதேச டி20 லீக் தொடர் அம்மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மீரட் மார்வலஸ் மற்றும் காசி ருத்ராஸ் அணிகள் மோதின.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/807084bb-604d-4b76-8a9a-b67f28002f27/t2786etg_rinku_singh_625x300_01_September_23.jpg)
முதலில் களமிறங்கிய காசி ருத்ராஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மீரட் மார்வலஸ் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் போட்டி டையில் முடிவடைந்தது.
சூப்பர் ஓவர் முறையில் போட்டியின் முடிவை நிர்ணயம் செய்வதற்காக இரண்டு அணிகளும் மீண்டும் மோதின. இதில், காசி ருத்ராஸ் அணி 16 ரன்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மீரட் மார்வலஸ் அணியில் ரிங்கு சிங் மற்றும் திவ்யனேஷ் ஜோஷி ஆகியோர் விளையாட வந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/0a2f7a7c-b854-4cce-9ea0-78fbe3a0f757/rinku_singh_meerut_mavericks_upt20_1_1693512814.jpg)
ரிங்கு சிங் முதல் பந்தில் ரன்களை எதுவும் எடுக்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்த மூன்று பந்துகளிலும் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து அணிக்கு வெற்றியைத் தேடி தந்திருக்கிறார். ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்த ரிங்கு சிங்யை தற்போது சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
from Latest news
0 கருத்துகள்