கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்திருக்கும் பரவளூரில் நேற்று இரவு அ.தி.மு.க-வின் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புவனகிரி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், ``நீட் தேர்வால் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் வடலூரை சேர்ந்த நிஷா என்ற மாணவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அத்தியாவசியப் பொருள்களின் விலையை ஏற்றிவிட்டு, பெண்களுக்கு ரூபாய் 1,000 வழங்குவது என்பது ஏமாற்று வேலை. ஸ்டாலின் தன்னைச் சிறந்த முதல்வர் என்று சொல்லிக்கொள்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/6e8e0898-cc48-4fab-a9cb-265962852a05/Untitled_2.jpg)
மற்ற மாநிலங்களைவிட அதிகமாகக் கடன் வாங்கி, முதலிடத்தில் இருக்கும் மாநிலம் என்ற பெருமையை ஸ்டாலின் பெற்றுத் தந்திருக்கிறார். கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வந்தபோது, ஸ்டாலின் தட்டுடன் பூவைத் தூக்கிப் போட்டுவிட்டார். அதனால்தான் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம், அதைக் காய்ச்சிய நபருக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கிய தி.மு.க அரசு, தஞ்சாவூரில் 15 ஏக்கர் நெற்பயிர்களை அழித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயிக்கு ஓர் இரங்கல் செய்திகூடச் சொல்லவில்லை” என்றார்.
from Latest news
0 கருத்துகள்