Header Ads Widget

மறக்க முடியாத திநகர் கோன் ஐஸ்! - 80ஸ் தீபாவளி நினைவலை | My Vikatan

`வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

விழாக்கள் என்றாலே சிறுவயதில் கொண்டாடியவைத் தான் பெரும்பாலும் மனதில் தங்கியிருக்கும். அதிலும் தீபாவளி என்றால், சிறுவயது ஞாபகங்கள் எட்டிப் பார்க்காமல் இருக்காது. Happiness in little things.. என்று சொல்வார்களே.. அது குழந்தைப் பருவத்திலும், பள்ளிப் பருவத்திலும் மட்டும்தான் உணரப்படும்.

சிறு வயது முதலே சென்னைவாசியான எனக்கு, தீபாவளி என்றாலே தி.நகர் தான் ஆஸ்தான இடம் ஆடைகள் வாங்க. ஆடைகள் வாங்கப் போகிறோமோ இல்லையோ.., அங்கு சென்று cone ice cream வாங்கிச் சாப்பிட வேண்டும் என்பதில் தான் விருப்பம் இருக்கும். அம்மா. ஒரு dress தான் எல்லாருக்கும் என்று strict ஆகக் கடைக்குக் கூட்டிச் சென்றாலும், சில நேரங்களில் இரண்டு ஆடைகள் அதிர்ஷடவசமாகக் கிடைத்ததுண்டு. கடைக்குச் செல்லும்முன்பே இந்த நிற ஆடை தான் வாங்கவேண்டுமென்று உறுதி எடுத்திருந்தால், அந்த நிற ஆடை கிடைக்கும்வரை கடை கடையாக ஏறிக் கொண்டேயிருப்போம். வாங்கிய ஆடைகளை சரிபார்த்து மீண்டும் மின்சார ரயில் ஏறி வீடு சேர்வதற்குள் ஒரு முழு நாள் முடிந்து விடும்.

தீபாவளி கொண்டாட்டம்

வாங்கிய ஆடையை வீட்டிற்குச் சென்றவுடனே போட்டுப் பார்த்து விட்டால் பரமதிருப்தி. பிறகு அதைப்பற்றி தோழிகளிடம் சொல்லிவிட மனம் பரபரக்கும். அடுத்த நாள் பள்ளியில் அதைப் பற்றிய பேச்சுவார்த்தை இருக்கும். தீபாவளிக்கு முன்னிரவு சரியாக தூக்கம் வராது.

சீக்கிரம் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைகுளித்து, குங்குமம் இடப்பட்ட அந்த புத்தாடையை போட்டுக் கொண்டவுடன் தான் மனம் நிம்மதி அடையும். எங்கள் வீட்டில் பட்டாசு வெடிக்கும் முன் யார் வீட்டிலாவது பட்டாசு சத்தம் கேட்டால், கோபம் வந்து விடும். அடடா, இன்னும் கொஞ்சம் சீக்கிரமா எழுந்திருந்திருக்கணும் எனத் தோணும்.

அவசர அவசரமாக புத்தாடை போட்டுக் கொண்டு, சரவெடி, புஸ்வானம், சங்கசக்கரம், பிஜிலி வெடி, லக்ஷ்மி வெடி எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வாசலுக்கு வந்து சுற்றுமுற்றும் பார்த்து , அங்கு இருப்பவர்களுக்கு, happy deepavali சொல்லியபடியே, வெடி வைத்து, காதை பொத்திக் கொண்டு தூர ஓடி நின்று டம் மென்ற சத்தம் வந்தவுடன், முகத்தில் சிரிப்பு வர, அடுத்த வெடிக்கு தயாராகி இருப்போம்.

Representational Image

ஏதாவது வெடி வெடிக்காவிட்டால், அதை ஆராய அருகில் செல்ல அவ்வளவு பயம் வரும். பிறகு அது வெறும் புஸ் எனத் தெரிந்தவுடன், அதை காலால் மிதிக்க மறக்கமாட்டோம். பசி என்பது இந்நாளில் மறந்தே போகும். தெருவில் இருக்கும் எல்லாரையும் விட எங்கள் வீட்டில் தான் நிறைய பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற வெறி வரும். பட்டாசு டப்பாவில், புது வகையான பட்டாசு வந்திருந்தால் , அப்போது நாம்தான் king. எல்லோரும் அந்த புதுப் பட்டாசை பார்த்தபடியே செல்வார்கள். என்னமோ அந்தப் பட்டாசையே நாங்கள் தான் தயாரித்தது போல பெருமை கொள்வோம்.

வீட்டில் ஒரு round பட்டாசு வெடித்து முடித்தப் பின், என் தோழிகளின் வீட்டிற்கு செல்வேன். முதலில் ஒரு தோழி வீட்டிற்குச் சென்று , அங்கு அவர்கள் தரும் இனிப்பை சாப்பிட்டு விட்டு, அவளோடு சேர்ந்து கொண்டு மற்றத் தோழிகள் வீட்டிற்குச் சென்று , அங்கு தரும் இனிப்பு காரம் எல்லாவற்றையும் சாப்பிட்டு, நடுநடுவில் தெருவில் சென்று கொண்டிருக்கும் தெரிந்த நபர்களுக்கும் happy diwali சொல்லி, யாராவது உன் dress நல்லாருக்கே என்றால், அகமகிழ்ந்து, பின் ஒவ்வொரு தோழியாக விடைபெற்ற பின் வீடு சேர்ந்து சாப்பிட பிடிக்காமல், காலை சீக்கிரம் எழுந்த சோர்வில் நன்றாக தூக்கம் வந்திருக்கும்..பிறகு மாலையும் பட்டாசு சங்கதிகள் ஆரம்பிக்க டமடமடமடம டம்டம்...

ஒலிகளுடன் அன்றைய தினம் ஒரு magic day போல் மாயமாகி இருக்கும். அடுத்த நாள் காலை எழவே பிடிக்காது. திரும்பவும் இந்தக் கொண்டாட்டம் வர ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமா என சோகம் வழியும் எண்ணங்களில். எவ்வளவு வெடித்திருந்தாலும், எப்படியும் சில பட்டாசுகள் மீந்திருக்கும். கார்த்திகைக்கு வெடிக்கலாம் என.எல்லாம் பரணையில் போய் தங்கி விடும்..

கார்த்திகை அன்று மழை பெய்யாமல் இருந்தால் தான் அவற்றிற்கு மோட்சம் கிடைக்கும்..இல்லாவிடில் அவை அங்கேயே தங்கிவிடும். தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதற்காகவே, மழைமேகங்கள் அவ்வப்போது பொழியாமல் பொறுமை காக்கும். வீட்டில் செய்த இனிப்பு கார வகைகள் இரண்டு மூன்று நாட்களுக்குப் பின் சுவையாகத் தெரியும். தீபாவளிக்கு அணிந்த புத்தாடை துவைக்கும் போது சாயம் போகாமல் இருந்தால், அது ஒரு.பெரிய விஷயம் அந்நாட்களில்.

Representational Image

பதின்வயதிற்குப் பிறகு கொண்டாடும் எந்தப் பண்டிகையிலும், சிறுவயது தீபாவளி கொண்டாடிய சந்தோஷம் வருவதில்லை. பள்ளிப் பருவம் எவ்வளவு இனிமையோ..அதேபோல் தான் பள்ளிப்பருவ தீபாவளியும். அதுவும் அப்போதெல்லாம் தீபாவளி உடை அணிந்து வாருங்கள் என்று ஒரு நாள் பள்ளியில் கூறியிருப்பார்கள் . அந்த நாளும் கொண்டாட்டமாக இருக்கும் சிறுவர்களுக்கு.

தீபாவளி லேகியம் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும் ..காரமாக இருந்தாலும் சாப்பிட சொல்லி ஒரு உருண்டை திணித்து விடுவார்கள். முகம் அஷ்டகோணல் ஆகும்..அப்பொதெல்லாம் கைப்பேசி என்ற ஒன்று இல்லை..இவையனைத்தையும் படம்பிடிக்க....

-Mrs. J. Vinu

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்