Header Ads Widget

"தமிழ்நாட்டின் மத்தியில் உள்ள மாவட்டம் தான் தலைநகராக இருக்க வேண்டும்!” - திருச்சியில் துரைமுருகன்

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தை தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு, திருச்சி குடமுருட்டி பாலம் அருகே நூறு அடி உயரக் கம்பத்தில் தி.மு.க கட்சியின் கொடியை ஏற்றினார்.

நிகழ்ச்சியில் பேசும் துரைமுருகன்

அதன்பிறகு, அறிவாலகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய துரைமுருகன், "ஆயிரம் கொடி இருந்தாலும் தி.மு.க கொடி போல் எதுவும் இல்லை. அதை பார்க்கும் போதே ஒரு மகிழ்ச்சி வருகிறது. எதையும் சாதிக்கும் திறனும் அமைச்சர் மகேஸிடம் இருக்கிறது. எல்லாம் தெரிந்தாலும், எதுவும் தெரியாதது போல் நடிக்கும் திறனும் அவரிடம் இருக்கிறது. அன்பிலார், பொய்யாமொழி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசி உள்ளேன். தற்போது, மூன்றாவது தலைமுறையான மகேஸ் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளேன். திருச்சி ஒரு மாவட்டமாக இருந்த போதும் பார்த்திருக்கிறேன். மூன்று மாவட்டமாக தற்போது உள்ளது. இன்னும் 5 மாவட்டமானாலும் ஆகும்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், கலைஞரின் தலைமை மாவட்டம் திருச்சி தான். தி.மு.க-விற்கும் திருச்சி தான் தலைமை மாவட்டமாக இருக்கிறது. திருச்சியை தலைநகரமாக மாற்ற எம்.ஜி.ஆர் விரும்பினார். அது சரி தான். தமிழ்நாட்டில் மத்தியில் உள்ள மாவட்டம் தான் தலைநகராக இருக்க வேண்டும். கட்சியில் திருச்சி தான் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. 5, 6 பேர் சேர்த்து வளர்த்த இந்த இயக்கத்தால் தான் இன்று நாங்கள் அமைச்சர்களாக இருக்கிறோம். இந்த இயக்கத்தின் உயிர் நாடியே தொண்டர்கள் தான். மற்ற கட்சிகளில் உயிர் நாடி உயிரோடு இல்லை. நம் இயக்கத்தின் மீது வீசிய புயல் இமயமலை மீது வீசியிருந்தால் இமயமலை சுக்குநூறாகியிருக்கும். ஒவ்வொரு தி.மு.க தொண்டனும் கட்சியின் காவல் தெய்வங்கள். 13 ஆண்டு அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

அந்த கட்சியில் இருந்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்தது. அப்போதும், தி.மு.க தொண்டன் தி.மு.க-விற்காகவே உழைத்தான். நாம் ஆட்சி செய்ததை விட வெளியில் இருந்தது தான் அதிகம். ஆனால், கொள்கைக்காக உறுதியாக இருந்தோம். எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி தி.மு.க-தான். ஒரே தலைவர் கலைஞர் தான். அதேபோல், 'எமர்ஜென்சியை எதிர்க்க வேண்டாம்' என இந்திராகாந்தி கேட்டு கொண்டாலும், எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் உறுதியாக இருந்ததால் ஆட்சி கலைக்கப்பட்டது. நாங்கள் சிறைக்குச் சென்றோம். தொண்டனுக்கு உதாரணமும் கலைஞர் தான், தலைவனுக்கு உதாரணமும் கலைஞர் தான்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/MpjmV21
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்