Header Ads Widget

Tamil News Live Today: அயோத்தியில் குவிந்த பக்தர்கள்... அதிகாலையிலே தள்ளுமுள்ளு! | Video

அயோத்தியில் குவிந்த பக்தர்கள்... அதிகாலையிலே தள்ளுமுள்ளு!

அயோத்தி ராமர் கோயிலில் நேற்று பால ராமர் சிலை பிராண் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று(23-01-2024) காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே அயோத்தி ராமரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதனால் ராமர் கோயில் பகுதியில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில பக்தர்கள் கீழே விழ, காயமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது!



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்