பொங்கல் பரிசு தொகுப்பு - அறிவித்தது தமிழக அரசு!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 2.19 குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.238.92 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுகரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட உள்ளது.
இம்மாதம் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதோடு ரூ.1,000 ரொக்கத்தையும் அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from India News https://ift.tt/OsWSQdq
via IFTTT
0 கருத்துகள்