Header Ads Widget

கூட்டுப் பாலியல் வதை... தீயிட்டுக் கொளுத்தி கொடுமை - மபி-யில் கர்ப்பிணிக்கு நடந்தேறிய கொடூரம்!

மத்தியப் பிரதேசத்தில், 34 வயது கர்ப்பிணியை மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீயிட்டு எரித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸார் தரப்பில் அம்பா காவல் நிலைய ஆய்வாளர் அலோக் பரிஹர் கூறிய தகவலின்படி, மொரீனா மாவட்டத்தின் அம்பா நகருக்கு அருகிலுள்ள சந்த் கா புரா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் கணவன், தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக ஒரு பெண் அளித்த புகாரில் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கர்ப்பிணி தன் கணவனுக்காக சம்பந்தப்பட்ட பெண் வீட்டுக்கு நேற்று சமரசம் செய்ய சென்றார்.

அப்போது, அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து மூன்று ஆண்கள், கர்ப்பிணியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தீயிட்டுக் கொளுத்தினர். அதையடுத்து, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் உடனடியாக ஜாமீனில் வெளிவந்த கர்ப்பிணியின் கணவன், சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றை போலீஸிடம் ஒப்படைத்தார்.

பாலியல் வன்கொடுமை

மேலும், பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தை மாஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், போலீஸார் இன்னும் அதைப் பதிவுசெய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாகவும், மருத்துவமனையில் 80 சதவிகித தீக்காயங்களுடன் கர்ப்பிணி உயிருக்குப் போராடி வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்