சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் வசித்து வந்தவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவரான பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன்.
இவருக்கு சாந்தி என்பவருடன் 36 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து ஒரு மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்தவர், சையத் அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக மணமுடித்துள்ளார். அதோடு, பாலசுப்பிரமணியன் இஸ்லாம் மதத்தை தழுவி தன் பெயரை அன்வர் உசேன் என்றும் மாற்றியுள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-11/3ce6de96-90c9-48a5-8873-393149c6a64c/madurai_high_court.jpg)
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார். அவர் உடலை தங்கள் மத வழக்கப்படி அடக்கம் செய்ய இரண்டாவது மனைவி சையத் அலி பாத்திமா தரப்பில் ஏற்பாடு செய்ய, முதல் மனைவி சாந்தி தன் உறவினர்களுடன் வந்து இந்து முறைபடி அடக்கம் செய்ய தன்னிடம் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் .
உடலைப் பெறுவதற்காக இரு மனைவிகள் தரப்பினரும் காரைக்குடி காவல்துறை ஏ.எஸ்.பி-யிடம் புகார் செய்ய, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறையினர் விசாரணை நடந்தியதில், முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டதால் தான்தான் சட்டப்பூர்வ வாரிசு என்று இரண்டாவது மனைவியும், விவகாரத்து உத்தரவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தான்தான் வாரிசு என்று முதல் மனைவியும் மாறி மாறிக் கூறியதால், எந்த முடிவும் எடுக்க முடியாமல் நீதிமன்றத்தை நாட சொன்ன காவல்துறை பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன் உடலை மார்ச்சுவரியில் வைத்தது. இந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-01/f27b9027-d791-4af0-acc6-34bc0f01151a/suicide_1.jpg)
இந்நிலையில் முதல் மனைவி சாந்தி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "அரசு மருத்துவமனையில் உள்ள டிரைவரின் உடலை முதலில் முதல் மனைவியிடம் ஒப்படைக்கவேண்டும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-08/b545fc2c-13c1-4890-a39b-9edbb62abd9d/madurai_high_court.jpg)
அவர்கள் தங்கள் மதப்படி சடங்குகளை முடித்து காரைக்குடி முஸ்லீம் ஜமாத்தினரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது மனைவி தங்கள் மத வழக்கப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்யலாம்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/R3csuxf
via IFTTT
0 கருத்துகள்