``நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ ரெய்டு நடத்தியிருப்பது பற்றி?”
``இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை, பா.ஜ.க-தான் இந்த வேலையை செய்கிறது. தேர்தல் ஆணையம் தொடங்கி அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ என எல்லா அமைப்புகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்தியாவில் தன்னாட்சி அமைப்புகளே கிடையாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. நாம் தமிழர் கட்சி விடுதலை புலிகளை ஆதரிக்கிறது என்கிறார்கள். நாங்கள் இன்று நேற்றா ஆதரிக்கிறோம். 14 ஆண்டுகளாக ஆதரித்துவருகிறோமே”
``பழிவாங்கல் என்கிறீர்கள்.. முகாந்திரமே இல்லாமல் ரெய்டு நடத்துவார்களா?”
``என்ன முகாந்திரம் இருக்கிறது. சோதனையில் என்ன கைபற்றினார்கள்? இரண்டே இரண்டு புத்தகம் மட்டும்தான். நிதி வந்தது என்கிறார்கள்... எவ்வளவு நிதி வந்தது.. எங்கிருந்து வந்தது. நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து எங்களுக்கு பெரும் சவாலாக இருப்பது நிதி மட்டும்தான். எங்களிடம் இவர்கள் சொல்வதுபோல் நிதி இருந்தால் தி.மு.க அ.தி.மு.க-வை என்றோ வென்றிருப்போமே”
`விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறது நாம் தமிழர்?”
``வரட்டும் வாழ்த்துகள்.. மண்ணுக்கான, மக்களுக்கான அரசியலை முன்வைக்கட்டும். விஜய் தனது கட்சியின் கொள்கை கோட்பாட்டை சொன்ன பிறகே அதில் நம்மால் கருத்து சொல்ல முடியும், விஜய் கொள்கையை பேசட்டும், மக்களை அரசியல்படுத்தட்டும். பின்னர் எதிர்ப்பதா ஆதரிப்பதா என்பதை பார்த்துக் கொள்ளலாம். ஒரு நடிகர் திரைபிரபலத்தை மட்டும் நாடாள முயன்றால் நிச்சயம் அதனை எதிர்ப்போம்”
`தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அணிகள் களத்தில் போட்டியிடுகின்றனவே?”
``தி.மு.க ஆட்சிமீதான அதிருப்திகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன, பா.ஜ.க பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு கடும் எதிர்ப்புகள் இருக்கின்றன. அ.தி.மு.க மீது மக்கள் நம்பிக்கை கிடையாது. சொல்லப்போனால் மூன்று கூட்டணிமீதும் வெறுப்பில் இருக்கிறார்கள் மக்கள். அதேசமயம் அரசியல் மாற்று எனச் சொல்லி எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தனித்து களம்காணும் நாம் தமிழர் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். பெருவாரியான வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்.”
`பா..ஜ.க-வின் கூட்டணியால் வாக்குகள் சிதறும் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே!”
``பா.ஜ.க எத்தனை கட்சிகளை ஒன்றிணைந்தாலும் தமிழ்நாட்டில் அது ஜீரோதான். காரணம் வலுவான கட்சிகள் கூட பா.ஜ.க-வுடன் சேர்ந்தால் ஜீரோ ஆகிவிடும். மற்றொன்று இவர்களோடு நாம் தமிழர் கட்சியை ஒப்பிடுவதே தவறு.”
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/ATLYwDa
via IFTTT

0 கருத்துகள்