Header Ads Widget

ஐ.சி.யூ-வில் சிகிச்சையிலிருந்த பெண்; மயக்க ஊசி செலுத்தி அத்துமீறிய நர்சிங் உதவியாளர் - பகீர் சம்பவம்

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில், பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக 24 வயது பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர தொற்று என்பதால் அவர் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதே மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக சிராக் யாதவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஐசியூ-வில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் அதிகாலை 4 மணியளவில் சென்ற சிராக் யாதவ், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.

காவல்துறை

அந்த பெண் சத்தமிடாமல் இருக்க, மயக்க ஊசி போட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். காலை அந்தப் பெண்ணின் கணவர் செல்போனில் அழைத்தபோதுதான் அந்தப் பெண்ணுக்கு மயக்கம் தெளிந்திருக்கிறது. உடனே கணவனிடம் நடந்தவற்றை விளக்கியிருக்கிறார். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், சிராக் யாதவை காவல்துறை கைது செய்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி,`` நர்சிங் உதவியாளரான சிராக் யாதவ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தோம். அதிகாலையில் ஐ.சி.யூ சென்ற சிராக் யாதவ் ஸ்கிரீன் மூலம் அறையை மூடும் காட்சி பதிவாகியிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்