Header Ads Widget

மதுரை: சாலையில் சிதறிய 500 ரூபாய் நோட்டுகள்; முண்டியடித்து அள்ளிச் சென்ற மக்கள்..! - என்ன நடந்தது?

சாலையில் சிதறிக்கிடந்த ஏராளமான 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் அள்ளிச்சென்ற சம்பவம், உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணத்தை அள்ளும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து தேனி செல்லும் சாலையில் மாமரத்துபட்டி விலக்கு பகுதியில், தேனியிலிருந்து மதுரை சென்ற வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறி நெடுஞ்சாலையெங்கும் கிடந்தது.

சாலையில் 100 மீட்டர் தொலைவிற்கு சிதறிக் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள், அப்பகுதியிலிருந்தவர்கள் என அனைவரும் அள்ளி சென்றனர். சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடக்கும் தகவல் பரவியதால் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஐநூறு ரூபாய்

சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் அவ்வழியாக வந்த வாகனத்திலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என்று கணித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் இந்த பணம் குறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில், அப்படியே புகார் அளித்தாலும் பொதுமக்கள் எடுத்துச் சென்ற பணத்தை திரும்பப் பெற முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

தற்போது மக்கள் பணத்தை எடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்