Header Ads Widget

கஞ்சா போதையில் இன்ஸ்டா ரீல்ஸ்; வைரலான வீடியோ முலம் இளைஞர்களுக்கு வலைவீசும் போலீஸார் - நடந்தது என்ன?

வித்தியாசமான முறையில் ரீல்ஸ் செய்து வெளியிடுவதை 2 கே கிட்ஸ் வழக்கமாக கொண்டுள்ளனர். பைக்கை ஓட்டி கொண்டும், பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டும், அரிவாளை தரையில் உரசி கொண்டும் ரீல்ஸ் செய்து அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முக்கியமான ஆன்மிக தலங்களில் ஒன்றான பழநியில் இளைஞர் கஞ்சா போதையில் வெளியிட்ட ரீல்ஸ் வேகமாக பரவுவதை தொடர்ந்து போலீஸார் அவர்களுக்கு வலைவீசி வருகின்றனர்.

இன்ஸ்டா ரீல்ஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட தேவஸ்தான சிறுவர் பூங்கா உள்ளது. பழனி-கொடைக்கானல் சாலை அருகே உள்ள இந்த சிறுவர் பூங்காவில் வைத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவில் சில இளைஞர்கள் கையில் கஞ்சாவை லாவகமாக வைத்து தேய்த்து, புகைத்துவிட்டு போதை ஏறியதும் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது போல இருந்தனர். அவர்களின் நண்பரை தூக்கிச் செல்வது போலவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் இளைஞர்கள்

இதுகுறித்து பழநி போலீஸாரிடம் விசாரித்தோம். ``அந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் ரீல்ஸ் செய்தது மட்டுமில்லாமல் அரிவாளை வைத்தும், தகராறு செய்வது போலவும் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். இளைஞர்களை தேடி வருகிறோம். பிடித்தவுடன் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதர்களையும் சேர்ந்து கைது செய்ய உள்ளோம். மேலும் பழநி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்