Header Ads Widget

`` `துணை முதல்வராகிறாரா உதயநிதி, ரஜினி ஆவேசம்!'னு யூடியூப் தலைப்பு... நானே பயந்துட்டேன்" - உதயநிதி

தமிழக அரசியலில் கடந்த சில நாள்களாகப் பரபரப்பாக இருப்பது, முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சராக்கப் போவதாக எழும் பேச்சுகள்தான். சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க பவள விழாவில், ஸ்டாலின் பெயரிலான விருதுபெற்ற நபர், `உதயநிதியை துணை முதலமைச்சராக்குங்கள்' என்று மேடையிலேயே கோரிக்கை வைத்தார். இவர் மட்டுமல்லாது, மூத்த அமைச்சர் பொன்முடியும், `வருங்கால தமிழகம் உதயநிதி' என்று மேடையில் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

தி.மு.க அமைச்சர்களும், `இன்னும் ஒரு வாரத்தில் உதயநிதி துணை முதலமைச்சராகிவிடுவார்' என்று வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். இருப்பினும், இதுபற்றி முதல்வர்தான் முடிவெடுப்பார் என உதயநிதி கூறிவருகிறார்.

ரஜினி

இவ்வாறிருக்க, வேட்டையன் பட இசைவெளியீட்டுக்காக சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ரஜினி, உதயநிதி பற்றிய பத்திரிகையாளர் கேள்விக்கு, `அரசியல் கேள்வி கேக்காதீங்க' என்று கூறிவிட்டு நகர்ந்தார். இந்த நிலையில், யூடியூபில் தன்னையும் ரஜினியையும் தொடர்புபடுத்தி வந்திருந்த வீடியோ தலைப்பைப் பார்த்து, தான் அதிர்ச்சியடைந்ததாக உதயநிதி தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற `தேர்தல் 2024: மீளும் 'மக்கள்' ஆட்சி' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, ``காலைல ஒரு நிகழ்ச்சியை முடிச்சிட்டு வெளியே வந்து என் செல்போன்ல யூடியூபைப் பார்த்தப்போ, `உதயநிதி துணை முதலமைச்சராகிறாரா, சூப்பர் ஸ்டார் ரஜினி ஆவேசம்' என்ற தலைப்பைப் பார்த்து நானே பயந்துட்டேன்.

உதயநிதி

இன்னும் அறிவிப்பே வரவில்லை. அதற்கான முழு உரிமையும் முதலமைச்சரிடம்தான் இருக்கு. இதை முதலமைச்சரிடம்தான் கேக்கணும். என்கிட்ட கேட்டீங்க சரி, அவரே பாவம். இதுக்கும் இப்போ, `சூப்பர் ஸ்டாருக்கு உதயநிதி பதிலடி-னு' தலைப்பு வைக்க போறாங்க" என்று கலகலப்பாகப் பேசினார்.



from India News https://ift.tt/Si8cOAW
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்