நடிகர் ரஜினிகாந்த் (73), நேற்று (செப்டம்பர் 30) இரவு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரஜினிகாந்த்துக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ரஜினி 'வேட்டையன்' படத்தை முடித்துவிட்டு, லோகேஷின் 'கூலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-02/543943db-fe59-4190-a707-2087da085586/FYv9QeVXwAEJbtR__1_.jpg)
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, அவர் தரப்பிலோ... மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலோ இதுவரையிலும் எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 9 மணியளவில் மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Vikatan Latest news
0 கருத்துகள்