Header Ads Widget

வேலூர்: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - 66 வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை!

வேலூர், கஸ்பா பகுதியைச் சேர்ந்த 66 வயது முதியவர் சேகர்.

கடந்த 2018-ம் ஆண்டு, விருதம்பட்டு பகுதியில் 12 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில், காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸாரால் முதியவர் சேகர் கைது செய்யப்பட்டார். அவர் மீது `போக்சோ’ வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முதியவர் சேகர்

போக்சோ குற்றவாளியான முதியவர் சேகருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், கூடுதலாக மேலும் 6 மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, முதியவர் சேகர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்