Header Ads Widget

Rain Alert: மீண்டும் தமிழகத்தை நோக்கி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; புயலாக உருவாகுமா?

கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பெய்து வரும் மழை இன்றும் (டிசம்பர் 13) தொடர்கிறது‌.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, நாளை (டிசம்பர் 14) தென்கிழக்கு வங்கக் கடலில் காற்று அழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வரும் 16 ஆம் தேதி இந்த புதிய காற்றழுத்த‌ தாழ்வுப் பகுதி தமிழ்நாடு மற்றும் வட இலங்கை பகுதியை அடையலாம். மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்குப் புயல் உருவாக வாய்ப்பில்லை.

புயல் உருவாக வாய்ப்பில்லை...

கன மழையை முன்னிட்டு தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, சேலம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், கரூர், சிவகங்கை, தேனி, விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்