Header Ads Widget

ஒன் பை டூ

கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்

“முழுக்க முழுக்க உண்மை. ஒரு ஜனநாயக நாட்டில், ‘எந்த இடர்ப்பாடும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்’ என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டவைதான் தன்னாட்சி அமைப்புகள். ஆனால், பா.ஜ.க ஒவ்வொரு தன்னாட்சி அமைப்பிலும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் புகுத்திக்கொண்டிருக்கிறது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அவருக்கு மேடைப் பேச்சு எழுதிக்கொடுத்த மனோஜ் சோனி என்பவருக்கு யூ.பி.எஸ்.சி சேர்மன் பொறுப்பு கொடுத்தது பா.ஜ.க. அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ரஞ்சன் கோகோய்க்கு ராஜ்ய சபா பதவி, அப்துல் நசீருக்கு ஆந்திர ஆளுநர் பொறுப்பு என ஒவ்வொருவருக்கும் பின்னாளில் வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அமலாக்கத்துறை தலைமைப் பொறுப்பில், தொடர்ச்சியாக மூன்று முறை ஒருவரையே நியமிக்க பா.ஜ.க துடித்ததிலிருந்தே அவர்களின் செயல்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற அருண் கோயல், அடுத்த நாளே இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுகிறார். சென்னை ஐஐடி இயக்குநரின் கருத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தப் பரப்புரையின் ஒரு பகுதிதான். இப்படி அனைத்துத் துறைகளையும் ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக மாற்றிவிட்டார்கள்!”

கனகராஜ், ஜி.கே.நாகராஜ்

ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க

“சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் என்பது கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தெரியுமா... பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகே நாடு முன்னேறியிருக்கிறது. விண்வெளிப் புரட்சி தொடங்கி ராணுவத் தளவாட உற்பத்தியை நம் மண்ணிலேயே செய்வது வரை இந்தியா தொடர்ந்து முன்னேறுகிறது. இவை அனைத்துக்கும் அறிவு சார்ந்தவர்களை, அனுபவம் மிக்கவர்களை, திறமையாளர்களை, தேசப்பற்று கொண்டவர்களை நாடு முழுவதும் தேடித் தேடி அவர்களுக்கு ஏற்ற பொறுப்பு களையும் பதவிகளையும் வழங்கிவருகிறோம். எனவே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தன்னாட்சி அமைப்புகள் அனைத்துமே பா.ஜ.க ஆட்சியில் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. ஜனாதிபதி, ஆளுநர் தொடங்கி அனைத்து உறுப்பினர்கள் பதவிகளையும் முறைப்படி குழு அமைத்து முடிவு செய்துகொண்டிருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. சமீபத்தில் வழங்கிய பத்ம, பத்மபூஷண் விருதுப் பட்டியலை எதிர்க்கட்சியினர் பாராட்டியது மறந்துபோனதா... கோமியம் குறித்து ஐஐடி இயக்குநர் சொன்னதற்கு அறிவியல்பூர்வச் சான்றுகள் இருக்கின்றன. உண்மையில் அறிவு சார்ந்தவர்களைத் தேடித் தேடி நியமித்துவருகிறது பா.ஜ.க அரசு!”



from India News https://ift.tt/m1uRdsQ
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்