Header Ads Widget

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு; "தணிக்கை செய்யாத தமிழக அரசே பொறுப்பு" - ராமதாஸ்

விக்கிரவாண்டியில் தனியார்ப் பள்ளியொன்றில், திறந்த நிலையிலிருந்த கழிவுநீர்த் தொட்டியில் மூன்றரை வயது தவறி விழுந்து பலியான சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து, 'எக்ஸ்' தளத்தில் ராமதாஸ், "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள புனித மேரி தனியார்ப் பள்ளியில் மூடி உடைந்ததால், திறந்த நிலையில் கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. குழந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தை விழுந்ததாக கூறப்படும் செப்டிக் டேங்க்
குழந்தை விழுந்ததாக கூறப்படும் செப்டிக் டேங்க்

பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர்த் தொட்டியின் இரும்பு மூடி, பல மாதங்களாகவே துருப்பிடித்து உடைந்த நிலையில் கிடப்பதாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதைத் தனியார்ப் பள்ளிகள் இயக்கமும், பிற அரசு அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதி செய்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசு அமைப்புகள் அவற்றின் கடமையைச் செய்யத் தவறியதன் விளைவாகவே மூன்றரை வயது குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தங்களின் வளாகத்திலேயே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாகச் செய்யத் தவறிய தனியார்ப் பள்ளிகள் தான், அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி வழங்கப் போவதாகக் கூறுகின்றன.

ராமதாஸ் , ஸ்டாலின்
ராமதாஸ் , ஸ்டாலின்

அதையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அகமகிழ்ந்து வரவேற்கிறார். அரசுப் பள்ளிகளுக்குத் தனியார்ப் பள்ளிகளிடம் இருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா என்று ஏங்குவதைவிடுத்து, தனியார்ப் பள்ளிகளில் குழந்தைகளைப் பலி வாங்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படுவதைப் பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்யவேண்டும்.

மூன்றரை வயது குழந்தையின் உயிரிழப்புக் காரணமான தனியார்ப் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று பதிவிட்டிருக்கிறார்.

Vikatan Audio Books

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil



from India News https://ift.tt/yp1Mnlg
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்