Header Ads Widget

Breaking Bad: 4 மில்லியன் டாலர்! - விற்பனைக்கு வந்த பிரேக்கிங் பேட் வால்டர் வைட் வீடு!

உலகப் புகழ்பெற்ற பிரேக்கிங் பேட் (BREAKING BAD) தொடரின் முன்னணி கதாப்பாத்திரமான வால்டர் வைட்டின்(WALTER WHITE) வீடு விற்பனைக்கு வந்துள்ளது.

2008-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பலம் கொண்ட தொடர் பிரேக்கிங் பேட். சாதாரண பள்ளி வேதியல் ஆசிரியரான வால்டர் வைட், உலகமே தேடும் போதைப்பொருள் உற்பத்தியாளர் ஹைசன்பெர்காக (HEISSENBERG) எப்படி மாறினார் என்பதை 5 சீன்களில் விவரிக்கும் இந்த தொடர், தற்போது வரை உலகளவில் பல திரைப்படங்கள் உருவாக முன்மாதிரியாக இருந்து வருகிறது.

இதில் வால்டர் வைட்டின் வீடாக காட்டப்படும் வீடு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் உள்ள அல்பகர்கியூ (ALBUQUERQUE) பகுதியில் அமைந்துள்ளது இந்த வீடு. 4 பெட்ரூம், 2 பாத்ரூம், ஒரு ஸ்விம்மிங் பூல் கொண்ட இந்த வீடு, 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது அந்த வீட்டின் அருகாமையில் உள்ள குடியிருப்புகளை விட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக்கிங் பேட் (Breaking Bad- Netflix)

இது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "1973-ம் ஆண்டு முதல் இது எங்கள் குடும்ப இல்லம் · கிட்டத்தட்ட 52 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது நாங்கள் கடந்து செல்ல வேண்டிய நேரம். இந்த வீட்டில் உள்ள எங்கள் ஞாபகங்களோடு விடைபெற்றுச் செல்கிறோம்" என்ற அவர்கள், பிரேக்கிங் பேட் சீரிஸின் படப்பிடிப்பு தருணங்கள் குறித்தும் பகிர்ந்தனர்.

அந்த ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்த வீட்டிற்குச் சென்று பார்ப்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.


from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்