Header Ads Widget

Budget 2025 Live : இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்! - முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு!

தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். குடியரசு தலைவரின் உரைக்கு பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்வார். இதனை தொடர்ந்து பிப்ரவரி ஒன்றாம் தேதியான சனியன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நிர்மலா சீதாராமன்!

இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக வருகிற 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும். அதன் பின்னர் மார்ச் 10-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். கூட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களின் மானியக்கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் 4-ம் தேதி முடிவடையும். முழு பட்ஜெட் கூட்டத்தொடரும் மொத்தம் 27 அமர்வுகளை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்