Header Ads Widget

Sunita Williams: 9 மாதங்களுக்கு பிறகு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்..

புவியீர்ப்பு விசையைத் தொட்டு பூமியில் கால் பதித்தார் சுனிதா வில்லியம்ஸ்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக (286 நாள்கள்) பயணித்து வரும் நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ்  உள்ளிட்ட நால்வரை பூமிக்கு அழைத்து வர டிராகன் விண்கலன் கடந்த மார்ச் 16-ம் தேதி அனுப்பப்பட்டது.

இந்திய நேரப்படி நேற்று(மார்ச் 18) காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை நோக்கி சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வரும்  தங்களது பயணத்தைத் தொடங்கினர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர்கள்

இந்திய நேரப்படி இன்று 'அதிகாலை 3 மணி அளவில்' டிராகன் விண்கலம் பூமியை வந்து சேர்ந்தது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்பட்டு , பூமியை வந்து சேரும் வரை காணொலி காட்சிகளை நாசா நேரடி ஒளிப்பரப்பு செய்திருந்தது. இந்தக் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ் பயண நேரக் குறிப்புகள்

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினர் பூமிக்குத் திரும்புவது தொடர்பாக கால அட்டவனையை நாசா வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி அதன் நேரக் குறிப்புகள் இங்கே...

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர்கள்

*மார்ச் 18, காலை 8:15 மணி: சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர் டிராகன் விண்கலத்திற்குள் சென்று, அவரவர் இருக்கையில் அமர்ந்தனர்.

*காலை 10:35 மணி: டிராகன் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டுப் பிரிந்தது (Undocking) பயணத்தைத் தொடங்கியது.

*மார்ச் 19, அதிகாலை 2:41 மணி: டிராகன் கலம் அதன் சுற்றுப்பாதையிலிருந்து வெளியில் வந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.

*அதிகாலை 3:27 மணி: கலத்தின் வேகம் குறைந்து, பாரசூட்டுகள் விரிக்கப்பட்டு பாதுகாப்பாக பெருங்கடலில் இறங்கியது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்