Header Ads Widget

Beauty: அழகே தக்காளி; கருமை போக்கி முகத்தை பளிச் ஆக்கும் தக்காளி!

'பியூட்டி பார்லருக்கெல்லாம் போறதுக்கெல்லாம் நேரமே இல்லீங்க' என்பவர்களுக்கு, அவங்க வீட்டி ஃப்ரிட்ஜிலேயே இருக்கிற குட்டிக்குட்டி பியூட்டி பார்லர் தக்காளிதாங்க. அதை எப்படியெல்லாம் பயன்படுத்தினா, நாம பளிச்சின்னு இருப்போம்னு பார்ப்போமா...

Beauty
Beauty

*தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.

*பழுத்த தக்காளியை பசை போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசை, கருமை நிறம் மறையும்.

தக்காளி அழகுக்குறிப்புகள்
தக்காளி அழகுக்குறிப்புகள்

*தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

*நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.

எளிதாக சிவப்பழகு பெற உதவும் தக்காளி
எளிதாக சிவப்பழகு பெற உதவும் தக்காளி

*3 டீஸ்பூன் தக்காளிச் சாறு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்ற செய்து வர வேண்டும்.

*2 டீஸ்பூன் தக்காளிச் சாறு, ஒரு டீஸ்பூன் ஓட்மீல், ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.

Beauty Tips
Beauty Tips

*ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்