Header Ads Widget

Retro: "'உங்க மகனுக்கு சினிமாவுல நடிக்க ஆர்வம் இருக்கான்னு டைரக்டர் கேட்டார்" - சிவகுமார் பேச்சு

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள லவ் ஆக்ஷன் திரைப்படம் ரெட்ரோ வரும் மே 1ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த படத்துக்கான இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார், சூர்யாவின் பயணம் குறித்துப் பேசியிருக்கிறார்.

"சூர்யாவின் கண்கள் பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கப்போகுது"

அவர் பேசியதாவது, "சூர்யாவுக்கு 17 வயசுல செயின்ட் பீட்டர் பள்ளியில படிக்கும்போது ஜாதகத்துல மூத்த பையன் கலைத்துறையில பெரிய ஆளாக வருவான்னு சொன்னாங்க.

Retro Exclusive Stills
Retro Exclusive Stills

உங்களவிட நல்லா நடிகர்னு பெயர் வாங்குவார், பணம் சாம்பாதிப்பார், விருதுகள் வாங்குவார்னு சொன்னாங்க. அப்போ அதை நம்பாம, நான் நடிகராக வருவனான்னு சூர்யா சிரிச்சார்.

இயக்குர் வசந்த் சூர்யாவைப் பார்த்துட்டு எனக்குக் கால் பண்ணி 'உங்க மகனுக்கு சினிமாவுல நடிக்க ஆர்வம் இருக்கா'னு கேட்டார். வாய்ப்பே இல்லைனு சொன்னேன். சூர்யாவும் முதல்ல பயந்தார்.

22 வயசு வரைக்கும் சூர்யா என்னோட ஷூட்டிங் வந்து பார்த்தது கிடையாது. சூர்யா படத்தில் நடித்தார். சூர்யாவின் கண்கள் பல பெண்களின் தூக்கத்தை கெடுக்கப்போகுதுன்னு சொன்னாங்க. என் மகனை நடிகனாக்கிய மணி ரத்னம் வசந்த் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

ரெட்ரோ
ரெட்ரோ

முழுமையான நடிகனாக வேண்டும் என்பதற்காக தினமும் நடனதுக்கும் சண்டைக்கும் பயிற்சி எடுத்துக்கொள்வார். 4 மணி நேரம் ஜீன்ஸ் அணிந்துகொண்டு நடன பயிற்சி செய்வார், பீச்சில் சண்டை மாஸ்டர்களுடன் மணிக்கனாக பயிற்சி எடுத்துக்கொண்டார். சூர்யாவுக்கு முன்னாடி சினிமாவுல எந்த நடிகர் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார்?.." என்று பேசினார்.

"என் கேரக்டரை கேட்டு பயம் வந்துடுச்சு" - ஜோஜு ஜார்ஜ்

ஜோஜு ஜார்ஜ்
ஜோஜு ஜார்ஜ்

சிவகுமாரைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஜோஜு ஜார்ஜ், "இந்த மாதிரி சினிமாவை கொண்டாடுற இடத்தை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கு.

எனக்கு என்னுடைய கதாபாத்திரதை கேட்டு முதலில் பயம் ஆகிடுச்சு. இந்த மாதிரியும் என்னால நடிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை கொடுத்த படம் ரெட்ரோ. எனக்கு மம்மூட்டி சார் படம் மூலமாகதான் பிரேக் கிடைச்சது." எனப் பேசினார்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்