Header Ads Widget

மதுரை மத்தியச் சிறை: பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி; சிறைத்துறையினர் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மதுரை மத்திய சிறைவாசிகள் அனைவரும் 100 சதவிகித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் அதிகமான அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றும், பாடங்களில் செண்டம் எடுத்தும் சாதனை படைத்துள்ளார்கள்.

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் 93.93 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை மத்தியச் சிறைச் சாலையில் உள்ள 9 பெண்கள் உட்பட 65 சிறைவாசிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தார்கள். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதுரை மத்திய சிறை
மதுரை மத்திய சிறை

இதில் மணிகண்டன் 398 மதிப்பெண்ணும், ரமணன் 394 மதிப்பெண்ணும் பெற்று முதல் இரண்டு இடத்தை பிடிக்க, பெண்கள் சிறையில் விமலா 395 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேர்ச்சி பெற்ற சிறைவாசிகள் அனைவரையும் சிறைத்துறை அதிகாரிகள், சிறைக்காவலர்கள், மற்ற சிறைவாசிகள் பாராட்டியுள்ளார்கள்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்