மும்பை: 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தொடர்ந்து தோல்விகள் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தோல்விக்கு தலைமை பயிற்சியாளர் ஸ்டீفن பிளமிங் தான் முக்கிய காரணம் என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அணியின் மெகா ஏலத்தில் தோனி பங்கேற்கவில்லை என்றும், அணியை கட்டமைக்கும் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சீசனில் அணியில் சேர்க்கப்பட்ட வீரர்கள் எதிர்பார்த்த அளவில் வரவில்லை. தீபக் ஹூடா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் தங்களது பேட்டிங் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தகர்த்துள்ளனர். இதனால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேபோல், ரச்சின் ரவீந்திரா அணியில் சேர்ந்த பிறகு விளையாட்டு தரம் குறைந்ததாகவும், பிளமிங் நியூசிலாந்து வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கிறார் எனவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. டி20 போட்டிகளில் ரச்சின் இன்னும் தன்னை நிரூபிக்காத நிலையில் தொடக்க வீரராக அவரை பயன்படுத்துவது CSK அணிக்கு பாதகமாக இருப்பதாகவும் ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், பிளமிங் அனுபவம் வாய்ந்த வீரர்களையே முன்னிறுத்துவதால் இளம் வீரர்கள் வாய்ப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர். தற்போதைய டி20 காலத்தில் அணிகள் 200 ரன்களை எளிதில் சேஸ் செய்கின்றன. ஆனால் பிளமிங் பழைய யுத்தியை பின்பற்றி கடைசி ஓவர்களில் மட்டுமே அதிரடி ஆட்டம் காட்ட முயன்றது தோல்விக்குக் காரணமாகியுள்ளது.
இதனால், பிளமிங் சென்னை அணியை விட்டு விலக வேண்டும் என ரசிகர்கள் கடுமையாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். CSK அணி தங்களது பாரம்பரியத்தை மீண்டும் உருவாக்க புதிய திட்டங்கள் தீட்ட வேண்டிய கட்டாயத்துக்கு வந்துள்ளது.




0 கருத்துகள்