Header Ads Widget

RCB: `இன்னும் ஒரு மேட்ச்தான்...கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!' - ரசிகர்களுக்கு ரஜத் பட்டிதர் மெசேஜ்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது.

RCB
RCB

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

அவர் பேசியதாவது, ``நாங்கள் எங்களின் திட்டங்களில் உறுதியாக இருந்தோம். எப்படி பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். பிட்ச்சின் தன்மையை எங்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். சுயாஷ் சர்மா பந்துவீசிய விதம் சிறப்பாக இருந்தது. ஒரு கேப்டனாக சுயாஷ் எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அவர் ஸ்டம்ப் டூ ஸ்டம்பாகத்தான் வீச வேண்டும்.

Rajat Patidar
Rajat Patidar

அவருடைய கூக்ளிக்களை பேட்டர்களால் அத்தனை எளிதாக எதிர்கொள்ள முடியாது. அவர் சில ரன்களை கொடுத்தாலும் எனக்கு பரவாயில்லை. அவர் அவரின் பலத்தை பிரயோகிக்கும் வகையில் வீச வேண்டும். சால்ட்டின் பேட்டிங்கிற்கு அவர் கொடுக்கும் அதிரடியான தொடக்கங்களுக்கும் நான் ரசிகன். பெவிலியனிலிருந்து அவர் ஆடுவதை பார்ப்பதை கொண்டாட்டமாக இருக்கும். ஆர்சிபியின் ரசிகர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பெங்களூருவில் மட்டுமில்லை. நாங்கள் செல்லும் எல்லா நகரங்களிலும் எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தார்கள். இன்னும் ஒரு போட்டிதான் மீதமிருக்கிறது. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம். காத்திருங்கள்.' என்றார்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்