Header Ads Widget

Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவிட்டது" - அமித் ஷா

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் மருத்துவ மாணவர்கள் விடுதியின் மீது விமானம் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

ஏர் இந்தியாவின் கூற்றின்படி இந்த விமானத்தில், 169 இந்தியப் பயணிகள், 61 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் 2 பைலட்டுகள், விமானப் பணியாளர்கள் 10 பேர் என மொத்தம் 242 பேர் இருந்தனர்.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Plane Crash

இதில், லண்டனில் இருக்கும் தனது மகளைக் காண இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துவிட்டதாகக் குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர். பட்டீல் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும், இந்த விபத்தில் உயிரிழவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

அதேசமயம், விமானத்தில் பயணித்தவர்களில் 11A இருக்கையில் பயணித்தவர் உயிர்பிழைத்திருப்பதாக அகமதாபாத் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்னொருபக்கம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த நிலையில் அகமதாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, "இன்று மதியம், ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானது. இதில், பல பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஒட்டுமொத்த நாடும் துக்கத்தில் இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஒருவர் உயிர்பிழைத்திருக்கிறார் என்ற நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. அவரை நான் சந்தித்தேன்.

மேலும், டிஎன்ஏ சரிபார்ப்புக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை அறிவிக்கப்படும். நான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன்.

விமானம் கிட்டத்தட்ட 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. அதனால், விபத்தில் அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போனது.

விமானம் கிட்டத்தட்ட 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது, மேலும் அதிக வெப்பநிலை காரணமாக, யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை.

இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 டி.என்.ஏ சோதனைகள் மேற்கொள்ளப்படும். இறந்த உடல்களின் டி.என்.ஏ மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

டி.என்.ஏ சோதனைகளுக்குப் பிறகு உடல்கள் ஒப்படைக்கப்படும். அதேசமயம், விசாரணையை விரைவாக மேற்கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது." என்று கூறினார்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்