முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர்.
இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது.
இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது.
உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார்.
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Vikatan Latest news

0 கருத்துகள்