Header Ads Widget

Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்

“ஜிம்முக்குப் போறேன், டயட் ஃபாலோ பண்றேன்... ஆயில் ஃபுட்ஸை விட்டுட்டேன். ஆனாலும், வெயிட் குறைஞ்சபாடில்லை” என்று இன்றைக்கும் பலரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள், எவையெல்லாம் உடல் எடையை அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டாலே, உடல் ஃபிட்டாக மாறி விடும். அவை என்னென்ன என்று பட்டியலிடுகிறார் பொதுநல மருத்துவர் முருகேஷ்.

Obesity
Obesity

டல் பருமனுக்கு உணவை மட்டுமே குறை சொல்ல முடியாது. எதைச் சாப்பிடுகிறோம், அதில் எவ்வளவு கலோரி கிடைக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

கிடைத்த கலோரியைச் செலவழித்தோமா என்பதையும் கவனிக்க வேண்டும். செலவாகாத கலோரிதான் கொழுப்பாக மாறும். இது உடலில் சேகரிக்கப்படும்.

தொடர்ந்து சேகரிக்கப்படும்போது உடல் பருமன் ஏற்படும். இந்தச் சுழற்சியைப் புரிந்துகொண்டாலே உடல் பருமனைத் தவிர்க்கலாம்.

ன் கொழுப்பை உடல் சேகரிக்கிறது என்று சந்தேகம் எழலாம். உடல் ஆரோக்கியமாக இயங்க ஆற்றல் தேவை. தினசரி, போதுமான ஆற்றல் கிடைத்தாலும் எதிர்காலத் தேவையை உடல் கவனத்தில்கொள்ளும்.

எனவே, தேவையான அளவு பயன்படுத்திக்கொண்டு, மீதம் உள்ள கலோரியை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதுபோல, உடலில் கொழுப்பாக மாற்றி சேமித்துவைக்கும்.

கலோரியை எரிக்க, கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டு வேலை, தோட்ட வேலை, நடைப்பயிற்சி போன்ற எளிய விஷயங்களைச் செய்தாலேபோதும், கலோரிகள் எரிக்கப்படும்.

Obesity
Obesity

ணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், நார்ச்சத்து என நான்கு முக்கிய சத்துக்கள் இருக்கின்றன. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்டிஆக்‌ஸிடன்ட்கள் உள்ளன.

இதில், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் மூன்றும் கலோரிகளாக மாற்றப்படும். இந்த அடிப்படையைத் தெரிந்துகொண்டால், உடல் எடையைத் தவிர்க்க முடியும்.

தேவையான நேரத்தில் உணவு உள்ளே செல்லும்போது, செரிமானம் சீராக நடக்கும். காலை உணவை 11 மணிக்கு சாப்பிட்டால், பாதி உணவு செரிமானம் ஆகாமல் கழிவாகவும் மாறாமல் கொழுப்பாக மாறிவிடும்.

Obesity
Obesity

ரவு நேரத்தில் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்வது, நான்கு பேருடன் பேசும்போது சும்மா நொறுக்குத்தீனிகளைக் கொறிப்பது, ‘இந்தக் கடையில் ஸ்வீட் சூப்பர்’, ‘இந்த கலர்...செம’, ‘இந்த உணவு டேஸ்ட்டி’ எனத் தேவை இல்லாத நேரத்தில் சாப்பிடுவது போன்றவை உடல் எடை கூடுவதற்கான முக்கியக் காரணங்கள்.

நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால் வாயு சேரும். சில வகை உணவுகளாலும் வாயு சேரும். இப்படி, பல வகையில் வாயு சேர்ந்தால் உடல் எடை அதிகரிக்கவே செய்யும்.

கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளைச் சர்க்கரை, மைதா, பேக்டு உணவுகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும்.

gastric problem
gastric problem

டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது, சுவாரஸ்யம் காரணமாகப் போதுமான அளவைவிட சற்றுக் கூடுதலாகச் சாப்பிட நேரும்.

ஏ.சியிலேயே இருப்பவர்கள், வியர்க்காமல் இருப்பவர்கள், தங்களுக்கு ஏதேனும் உடல் உழைப்பு இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இடுப்பு, வயிற்றுப்பகுதிகளில் சதை போடத்தான் செய்யும்.

லச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்குக் கழிவுகள் உடலில் தேங்கி நிற்கும். உடல் எடை கூட வாய்ப்பாக அமைந்துவிடும்.

Good Food
Good Food

ஹார்மோன் பிரச்னைகளும்கூட பருமனுக்குக் காரணம் ஆகலாம். ஹைப்போதை ராய்டிசம், தைராய்டு, ஹார்மோன் பிரச்னை இருப்பவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும்.

வாழ்க்கை முறையிலும், உணவிலும் தவறான பழக்கங்களைச் சரி செய்தால், உடல் எடை தானாக குறைந்துவிடும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்