Header Ads Widget

Russia - Ukraine War: பயங்கர தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?

நேற்று முன்தினம், ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று துருக்கியில் இரு நாடுகளும் இரண்டாம் கட்டப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு, உக்ரைன் நேற்று ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது. இதனால், நேற்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்குமா என்று பெரியளவில் உலக நாடுகளின் மத்தியில் சந்தேகம் எழுந்திருந்தது.

ரஷ்யா, உக்ரைன்
ரஷ்யா, உக்ரைன்

சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இரு நாடுகளும் நேற்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. இதுகுறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல்கள்...

இந்த மாத (ஜூன்) இறுதிக்குள், ரஷ்யா அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்று உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.

இரு நாடுகளும் முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட போர் நிறுத்தம் குறித்த அறிக்கைகளை துருக்கி அதிகாரிகள் முன்னால் மாற்றம் செய்துகொண்டது.

அடுத்தகட்டமாக, இன்னும் உள்ள சில சிறைக் கைதிகளை இரு நாடுகள் அவரவர் நாட்டிற்கு அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளன.

உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளின் பட்டியல் ரஷ்யாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களை ரஷ்யா மீண்டும் உக்ரைனிற்கு அனுப்ப வேண்டும் என்று உக்ரைன் அதிபர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

துருக்கி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஓன்கு கெசெலி, 'இன்று நடந்த சந்திப்பு எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடிந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.



from India News https://ift.tt/tDxIoiN
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்