Header Ads Widget

``முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுற்றுப்பயணமா? வெற்றுப்பயணமா?'' - ஆர்.பி. உதயகுமார் கேள்வி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது,

"உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிரைவேற்றியுள்ளார். மிக எழுச்சியாக, ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் உசிலம்பட்டி தொகுதியில் அவரது பேருரை நடைபெறும். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எழுச்சிப் பயணம் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் அமையும். அரசியல் தலைநகரான மதுரையில் அவரது பேச்சை கேட்க மக்கள் தயாராக உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம்

முதலமைச்சரின் நான்காவது வெளிநாட்டு பயணம் சுற்றுப்பயணமா அல்லது வெற்றிப் பயணமா என்பது பின்னர் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டார்; இதுவரை வெளியிடவில்லை. பல விஷயங்களை நாம் செய்தோம், வானத்தை வில்லாக வளைத்தோம், மணலை கயிறாக திரித்தோம் என்று சொல்கிறார்கள்.

சட்ட ஒழுங்கு சீர்கேடு

சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக இங்கிருக்கும் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதி

திருப்பூரில் மொத்த ஏற்றுமதி இல்லை. இந்த நிலைமையெல்லாம் முதலமைச்சருக்கு நன்றாக தெரியும், ஆனால் இதற்கான தீர்வு எது என்பது தெரியவில்லை. அவர் ஏதோ கடிதம் எழுதி உள்ளதாகக் கூறுகிறார்.

ஆர்.பி.உதயகுமார்

விளம்பரம்

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு வெறும் கையோடுதான் திரும்பி வருகிறார்.

விளம்பர வெளிச்சத்தில் நாடகம் நடத்தி வருகிறார்; விளம்பரம் அணைந்துவிட்டால் படம் ஓடாது. அதிகாரம் போய்விட்டால் வெளிச்சமும் போய் விடும். உண்மை முகம் தெரிந்துவிடும், அதற்கான காலம் கனிந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பாக உள்ளது," என்றார்.



from India News https://ift.tt/1SU2C8h
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்