நீலகிரியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு மற்றும் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்குறது. இதனை அறிந்த பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர், மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 14 வயது மகள் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் உண்மை வெளியாகியிருக்கிறது.
இந்த கொடூரம் குறித்து நம்மிடம் பேசிய பெண் காவலர் ஒருவர், "நீலகிரியைச் சேர்ந்தவர் சேகர். 50 வயதான இவர் அழகுத்தாவரங்களை விற்பனை செய்யும் நர்சரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவஎஇன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் 14 வயது பள்ளி மாணவியை காரில் அழைத்து வந்து அவ்வப்போது பள்ளியில் விட்டிருக்கிறார். இதை நம்பிய மாணவியின் பெற்றோரும் சேகருடன் அடிக்கடி காரில் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை சாதமாக்கிய சேகர், அந்த சிறுமியிடம் 2 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டி வந்துள்ளார். மாணவியும் பயத்தில் யாரிடமும் இது குறித்து சொல்லாமல் இருந்திருக்கிறார். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். சேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தோம் " என்றார்.
from Latest News

0 கருத்துகள்