Header Ads Widget

``கடும் பசி... 25 ரொட்டிகளை உண்ட மயக்கத்தில் தூங்கிவிட்டேன்'' - வைரலாகும் போலீஸின் விளக்க கடிதம்!

உத்தரப்பிரதேசத்தில், ராம் ஷெரீப் யாதவ் என்ற போலீஸ் அதிகாரி ஒருவர் அக்டோபர் 10-ம் தேதி லக்னோவில் இருந்து சுல்தான்பூர் காவல் பயிற்சிப் பள்ளிக்கு (Police Training School ) வந்திருந்தார். அப்போது வகுப்பறையில் ஒரு ராணுவ வீரரைப் பற்றி சக அதிகாரிகள் விவாதம் செய்து கொண்டிருந்தனர். அந்த விவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ராம் ஷரீப் யாதவ் என்ற போலீஸ் அதிகாரி தூங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.இதைக் கண்டு கோபமடைந்த தலைமை அதிகாரி இவரை கடுமையாக திட்டியிருக்கிறார். மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

பயிற்சியின் போது தூங்கிவிட்ட போலீஸ்

இந்தநிலையில், யாதவ் உயர் போலீஸ் அதிகாரிக்கு விளக்க கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``லக்னோவில் இருந்து பி.டி.சி. தாதுபூருக்கு பயிற்சிக்காக புறப்பட்டேன். மிகவும் சிரமப்பட்டு இந்த இடத்தை வந்தடைந்தேன். சரியாக உணவு கிடைக்காத காரணத்தால் பசியுடனே இருந்தேன். அதனால், அடுத்த நாள் காலையில் தான் சாப்பிட்டேன். கடுமையான பசியில் இருந்த நான் 25 ரொட்டிகள், ஒரு தட்டு சாதம், இரண்டு கிண்ணங்கள் பருப்பு மற்றும் ஒரு கிண்ணம் காய்கறிகளை சாப்பிட்டு விட்டேன். இது எனக்கு ஒரு விதமான சோம்பலையும் தூக்கத்தையும் ஏற்படுத்தியது. அதனால் பயிற்சியின் போது தூங்கி விட்டேன். இன்மேல் இது மாதிரியான தவறு நடக்காது என உறுதியளிக்கிறேன்'' என்றார்.

அந்த விளக்கக் கடிதத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்