Header Ads Widget

நெகிழ்ச்சி சம்பவம்: தாயின் கிசிச்சைக்கு நன்கொடை; ஒன்றரை ஆண்டுகள் கழித்து திருப்பி செலுத்தும் மகன்!

நாம் ஒருவருக்கு பண உதவி செய்யும்போது அவர்கள் நமக்கு அந்த பணத்தை திரும்பி தருவார்களளா, இல்லையா என்று நமக்கு தெரியாது. ஆனால் மனிதாபிமானத்தின் அடிப்படையில் பிறருக்கு உதவி செய்கிறோம். இந்தநிலையில், முகம் தெரியாத ஒரு நபருடைய தாயின் சிகிச்சைக்காக ரூ.201 நன்கொடையாக வழங்கிய ஒருவர், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பணத்தை திரும்பப் பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கமல் சிங் என்பவர் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய வங்கி கணக்குக்கு முகம் தெரியாத நபரிடமிருந்து ரூ.201 போன்பே மூலம் வந்திருப்பதாக ஒரு மெசேஜ் வந்திருக்கிறது.அவர் தற்செயலாக யாரிடமிருந்து பணம் வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தன்னுடைய போன்பே-வை பார்த்திருக்கிறார். அப்போது ஒரு நபர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய தாயின் சிகிச்சைக்காக சமூக வலைதளங்களின் மூலம் நிதி திரட்டியிருக்கிறார்.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து ரூ.201 பெற்ற நபர்

அந்த முகம் தெரியாத தாயின் நபருக்காக கமல் சிங்கும் ரூ.201 நன்கொடையாக கொடுத்திருக்கிறார். தற்போது தான், நிதி உதவி பெற்ற அத்தனை பேருக்கும் பணத்தை திருப்பி அனுப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான மெசேஜ்ஜை தன்னுடைய போனில் பார்த்த போது, இவருக்கு அந்த நிகழ்வு நினைவுக்கு வந்திருக்கிறது.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த கமல் சிங், தன்னுடைய போன் பேவிலிருந்து அந்த முகம் தெரியாத நபருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். உங்களுடைய அம்மா எப்படி இருக்கிறார்? என கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு அவர்,`` என்னுடைய அம்மா நலமாக இருக்கிறார். தற்போது என்னுடைய வியாபாரமும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதனால் நான் என்னுடைய தாயின் சிகிச்சைக்காக மற்றவர்களிடம் வாங்கிய கடனை தற்போது திரும்ப செலுத்தி வருகிறேன்.. நன்றி'' என அனுப்பியிருக்கிறார்.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து ரூ.201 திரும்ப பெற்ற நபர்

இவருடைய நேர்மையைக் கண்டு வியப்படைந்த கமல்சிங், இவர்கள் மேசேஜ் செய்து கொண்டதை ஸ்கிரீன்ஷாட்டாக சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அதில்,`` பணத்தாசை கொண்ட மனிதர்கள் வாழும் உலகில், அவருடைய நேர்மையைக் கண்டு நான் வியப்படைகிறேன்'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மனிதநேயத்தை வாழ வைத்த உங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் என இவர்களை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்