விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் முதல் வாரம் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. 'கலந்து கொள்பவர்கள்' என ஓரளவு உறுதியாகத் தெரிய வந்த சிலரது பெயர்கள் ஏற்கெனவே விகடன் தளத்தில் வெளியாகி இருந்தன.
அந்த வகையில் முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ரா, நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ராபர்ட், யூடியூபரும் சமீபத்தில் நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்தவருமான ரவீந்தர், அமுதவாணன் ஆகியோரின் பெயர்களை வெளியிட்டிருந்தோம். இதேபோல் 'சரவணன் மீனாட்சி' தொடரில் தோழிகளாக நடித்த ரச்சிதா, 'மைனா' நந்தினி இருவருமே கலந்து கொள்கிறார்கள் என்கிற தகவலையும் வெளியிட்டிருந்தோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-09/d08ddd66-bfb6-40af-ac07-7abc36df31e5/4d29f004-9b3f-48dd-adfc-5a6723f99522.jpg)
இவர்கள் தவிர டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, நகைச்சுவை நடிகர் மதுரை முத்து இருவரில் ஒருவர் கலந்து கொள்ளலாம் என்கிற தகவலையும் வெளியிட்டிருந்தோம். இவர்களில் மதுரை முத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே ஜி.பி.முத்துவுக்கு ரூட் க்ளியர்.
தொடரும் இந்தப் போட்டியாளர் பட்டியலில் லேட்டஸ்ட்டாக மேலும் இரண்டு பேர் குறித்த விவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதன்படி VJ மகேஸ்வரி மற்றும் சீரியல் நடிகை ஆயிஷா இருவரும் பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-12/de90725b-37be-40a4-9f12-e841775da9f4/p5h.jpg)
ஆயிஷா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த 'சத்யா' சீரியலில் நடித்தார். தொடர் முடிவடைந்ததும் அதன் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பானது. இந்நிலையில் 'பிக் பாஸ்' வாய்ப்பு வந்ததையடுத்து தன்னை சீரியலில் இருந்து விடுவிக்குமாறு கேட்டு தொடரிலிருந்து வெளியேறினார்.
VJ மகேஸ்வரி கமலின் சமீபத்திய ஹிட் படமான 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக மைனா நந்தினியுடன் சேர்ந்து நடித்திருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-10/251736e5-bae4-41b5-bc8e-ce39e3d22673/Actress_hot_and_sexy_photoshoot_VJ_Maheswari_in_black_t_shirt_hot_photos_51898.jpg)
இவர்கள் தவிர முன்னரே குறிப்பிட்டதுபோல இந்த முறை வழக்கமான 18 போட்டியாளர்களுடன் 6 பேர் பொதுமக்களிலிருந்தும் ஆடிஷன்கள் வைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாகக் கலந்துகொள்வார்கள். எனவே இந்த சீசன் 24 போட்டியாளர்கள், 24 மணி நேர ஒளிபரப்பு எனக் களைகட்டப்போகிறது.
from Latest News
0 கருத்துகள்