Header Ads Widget

கோவை: தீபாவளிக்கு துணி எடுக்கச் சென்ற சிறுவன் கொலை! - ஐடிஐ மாணவர் கைது... என்ன நடந்தது?

கோவை, சுந்தராபுரம் காமாட்சியம்மன் தெருவைச் சேர்ந்தவர் கவி ராஜ். இவர் மனைவி கவிதா. இந்தத் தம்பதி மகன் பரத் என்கிற கிருஷ்ணராஜ் (17). கவிராஜ் இறந்துவிட்டதால், கவிதா கூலி வேலைக்குச் சென்று வந்தார்.

பரத்துக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்களுக்கும் இடையே பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக பரத்தும் அவர் நண்பரும் கோவை ராஜ வீதிக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றிருக்கின்றனர். அங்கு வந்த சிறுவனுக்கும், பரத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

கொலை

அப்போது, அந்தச் சிறுவன் கத்தியால் குத்தியதில் பரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த உக்கடம் போலீஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்த 17 வயது ஐ.டி.ஐ மாணவனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்