Header Ads Widget

தமிழக-கேரள இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல சதி திட்டம்- மத்திய உளவு பிரிவு எச்சரிக்கை

தமிழகம்- கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து இந்த 2 மாநிலங்களிலும் இந்து இயக்க தலைவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் உஷாராக இருக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது. ஒய் பிரிவு பாதுகாப்புக்காக கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேரின் பெயர் பட்டியலை கொடுத்து அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவு பிரிவினர் எச்சரித்து உள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த தலைவர்களுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

image

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில் தலைமை பொறுப்பில் உள்ள 4 நிர்வாகிகளும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று இந்து இயக்கங்களில் தீவிரமாக செயலாற்றி வரும் முன்னணி நிர்வாகிகளும் வெளியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியில் செல்லும் போது தங்களது பாதுகாப்பு விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது.

தமிழகம், கேரளா உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

image

இந்த நிலையில் தான் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழகம், கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தான் கேரளாவில் 5 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டிருப்பதுடன், தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி இருப்பதாக தகவல் தெரிய வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்