காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை இலக்காகவைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவருகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை இதுவரை ஏறத்தாழ 1000 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்திருக்கிறது. இன்று 42-வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கியிருக்கிறது. கர்நாடகாவில் ராகுல் காந்தியின் பயணம் தொடர்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலை முன்னிட்டு நேற்று யாத்திரை இடை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்லாரியில் உள்ள யாத்திரை முகாமில் ராகுல் காந்தி, உள்ளிட்ட யாத்திரையில் கலந்து கொள்ளும் நிர்ட்வாகிகள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து, இளைஞர்கள், உள்ளூர் மக்களிடம் கலந்துரையாடினார் ராகுல். அப்போது ஒருவர்,"இந்த வெயிலில் நடந்து வருகிறீர். உங்களின் தோலை பாதுகாக்க என்ன சன் ஸ்கிரீன் பயன்படுத்துகிறீர்கள்" எனக் கேள்வி எழுப்பினார்.
Mr @RahulGandhi :
— Supriya Bhardwaj (@Supriya23bh) October 17, 2022
I don’t use sunscreen…
मेरी माँ ने मेरे लिए Sunscreen भेजी है लेकिन मैं इस्तेमाल नही करता pic.twitter.com/VTNTWHLHiZ
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ராகுல் காந்தி, "என் அம்மா எனக்கு சன் ஸ்கிரீனை கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் நான் அதைப் பயன்படுத்தவில்லை." எனத் தெரிவித்தார். அதற்கு அந்த உள்ளூர் வாசி,"ஆனாலும் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது" என பாராட்டினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/BOZI0Jy
via IFTTT

0 கருத்துகள்