Header Ads Widget

``எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ராஜ்நிவாசில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ``எனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது. குறிப்பாக மாநிலத்தில் ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் உள்ளது. இவை அனைத்தையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். டி.ஆர்.எஸ், எம்.எல்.ஏக்களை விலைபேசிய வழக்குடன் தொடர்புபடுத்தி சில சமூக ஊடகப் பதிவுகள் வருக்கின்றன" என்றார்.

தமிழிசை சௌந்தரராஜன்

முன்னதாக, தெலங்கானா பல்கலைக்கழகங்களின் பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா, 2022-ஐ நிறைவேற்றுவதில் ஆளுநர் தாமதம் செய்வதாக மாநிலக் கல்வித் துறை அதிகாரிகள் வெளிப்படையாக குற்றஞ்சாட்டினர். ஆனால் அது உண்மையல்ல என்று ஆளுநர் தமிழிசை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தெலங்கானாவில் இந்த பணி நியமனங்களில் ஆட்களை நியமனம் செய்வது தாமதம் ஆகும் விவகாரம் ஆளுநர் தமிழிசைக்கும் டி.ஆர்.எஸ் அரசுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்