Header Ads Widget

கேங் வார்; மகளை பயிற்சி மையத்திலிருந்து அழைத்துவர சென்ற தந்தைக்கு ரௌடிகளால் நேர்ந்த கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலம், நாகூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி தாராசந்த். இவர் தன் மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அவர் தனது மகள் கொனிதாவை மருத்துவராக்குவதற்காக நீட் பயிற்சி மையத்தில் சேர்த்திருக்கிறார். மகளை பயிற்சி மையத்திலிருந்து அழைத்து வர நேற்று தாராசந்த் சென்றிருக்கிறார். அங்கு இரண்டு ரௌடிகள் குழுவுக்கு மத்தியில் சண்டை நடந்திருக்கிறது. அதனால் அங்கிருந்து தப்பிக்க முயன்ற ராஜு தத் எனும் ரௌடி, தாராசந்த்தின் கார் சாவியை பறித்துக் கொண்டு ஓடியதாகக் கூறப்படுகிறது.

அதை தடுக்க முயன்ற தாராசந்த்தை அந்தக் கும்பலில் ஒருவன் சுட்டிருக்கிறான். இதில் சம்பவ இடத்திலேயே தாராசந்த் உயிரிழந்தார். குற்றம்சாட்டப்பட்ட ராஜூ தத்தும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். 

கொலை

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது. இதற்கிடையேயே, தாராசந்தின் உறவினர்கள் இந்தத் சம்பவம் தொடர்பாக கடும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

ராஜஸ்தானின் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா ட்விட்டரில், "ஒரு கல்வி மையத்திற்கு வெளியே நடந்த கொடூரமான செயலைக் கண்டிகிறேன். மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீட்டெடுக்க, கொலை செய்துவிட்டு தப்பித்த கும்பலை விரைவில் கைது செய்ய வேண்டும்" என ராஜஸ்தான் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்