கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (42). ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவரும் டாடாபாத் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (39) என்பவரும் நண்பர்கள்.
இதனிடையே இருவரும் இணைந்து கடந்த 2017-ம் ஆண்டு தங்களின் பெயரில் போலியான கம்பெனிகளை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த கம்பெனி பெயரில் வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து அந்த வங்கிக் கணக்கு மூலம், வங்கியில் இருந்து POS மெஷின்களை பெற்று அதன் மூலம் வெளிநாட்டு கிரெடிட் கார்டுகளை (Skimmed Cards) ஸ்வைப் செய்து அந்தப் பணத்தை தங்களின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்து வந்துள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
இதன் மூலம் வங்கிகளுக்கு ரூ.43.76 லட்சம் பணம் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. அதனடிப்படையில் மனோகரன் மற்றும் தேவராஜ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீஸார் இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தனர். ஆனாலும், இருவரும் போலீஸில் சிக்காமல் இருந்தனர்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பேரையும் போலீஸ் கைது செய்துள்ளனர். இதில் மனோகரன் அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News

0 கருத்துகள்