Header Ads Widget

குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆசிரியர்... 500 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்து பலியான சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் வசிக்கும் அப்துல் ஷேக் என்பவர் கொங்கன் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடைய கார் புனே அருகிலுள்ள வராந்தா கேட் பகுதியில் மலையில் சென்று கொண்டிருந்த போது, வக்ஜாய் என்ற இடத்தில் கோயில் அருகே தன் காரை நிறுத்தினார். அங்கு அதிகமான குரங்குகள் இருந்தன. உடனே அந்த குரங்குகளுக்கு சாப்பாடு போட்ட அப்துல் ஷேக், அந்த குரங்குகளோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள முயன்றார்.

ஆனால் அந்த நேரம் அப்துல் ஷேக் எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இது குறித்து உள்ளூர் மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் மலையேற்ற பயிற்சியாளர்கள் துணையோடு பள்ளத்தில் விழுந்தவரின் உடலை தேடினர்.

மரணம்

போலீஸார் 9 மணி நேரம் போராடி அப்துல் ஷேக் உடலை இறந்த நிலையில் மீட்டனர். ஆசிரியரான அப்துல் ஷேக்கிற்கு சொந்த ஊர் லாத்தூராகும். அவர் தன்னுடைய குடும்பத்தோடு போர் தாலுகாவில் உள்ள நஸ்ராபூர் என்ற கிராமத்தில் வசிக்கிறார். அருகிலுள்ள ஒரு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவரின் மனைவியும் ஆசிரியராகவே பணியாற்றி வருகிறார். அப்துல் ஷேக் பள்ளத்தில் விழுந்த இடம் மிகவும் அபாயகரமானது. அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது எனக் கூறப்படுகிறது. அதோடு மழை காலத்தில் இங்கு அதிக அளவில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் விருப்பமான பகுதியாக இருந்து வருகிறது. ஏற்கெனவே மழை காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/9HsEtCV
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்