Header Ads Widget

`கூட்டுப் பாலியல் வன்கொடுமை; பிறப்புறுப்பில் சூடு’ - நண்பர்களைப் பழிவாங்க போலிப் புகார் செய்த பெண்

மும்பை குர்லா பகுதியில் வசிக்கும் 42 வயது பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் போலீஸில் கொடுத்திருந்த புகாரில், நவம்பர் 30-ம் தேதி அதிகாலை தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி, தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சிகரெட்டால் தனது பிறப்புறுப்பில் சூடுபோட்டதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு இரண்டு நாள்கள் மருத்துவமனையிலும் இருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். குற்றவாளிகள் மூன்று பேரில் பப்லு மொகமத் என்பவர் மட்டும் கைதுசெய்யப்பட்டு கடந்த 40 நாள்களாக சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் பெண் கொடுத்திருப்பது போலிப் புகார் என்று தெரியவந்திருக்கிறது.

இது குறித்து குர்லா போலீஸ் நிலைய அதிகாரி தேஷ்முக் கூறுகையில், ``புகார் கொடுத்த பெண்ணை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது. இதை உறுதி செய்ய இரண்டு மருத்துவமனையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அதோடு அவரின் உடம்பில் இருக்கும் காயங்கள் அவராகவே உருவாக்கிக்கொண்டவை என்றும் தெரியவந்திருக்கிறது. தடயவியல் ஆய்வு முடிவுகளும் குற்றச்சாட்டுக்குச் சாதகமாக இல்லை. விசாரணையில் நான்கு பேரும் கூட்டாக போதைப்பொருள் வியாபாரம் செய்துள்ளனர். அவர்களுக்குள் வியாபார பிரச்னை ஏற்பட்டதால் அவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தில் மூன்று பேர் மீதும் சம்பந்தப்பட்ட பெண் போலியாகப் புகார் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக விரிவான அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளான மற்ற இரண்டு பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்துள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/itTplwr
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்